Banner
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்

நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கே தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 500,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகிறது. 30 இலட்சத்திற்கும் அதிகமாக பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு, பாதுகாத்து மின்நூலகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல பல்கலைகழகங்களுடன் இணைந்து பணிபுரிகிறது.

card image
நூலகத்தைப் பற்றி
card image
நூல்பட்டியல்
card image
மின்னூலகம்
card image
நூலகத்தை பார்வையிட
card image
நூல் பாதுகாப்பு
card image
சிந்துவெளி ஆய்வு மையம்
card image
பொதுவியல் ஆய்வு மையம்
card image
நூல் வெளியீடுகள்
card image
நூலகச் சேகரிப்புகள்
card image
நிகழ்ச்சிகள்
card image
நிர்வாக அமைப்பு
card image
தன்னார்வளராக இணைய
தமிழ் அறிவு வளாகம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தமிழ் அறிவு வளாகம் உருவாக்கும் ஒரு பயணத்தை தொடங்கியுள்ளது. தமிழ் அறிவு வளாகம் என்பது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சிந்துவெளி ஆய்வு மையம், பொதுவியல் ஆய்வு மையம், அச்சுப் பண்பாட்டு அருங்காட்சியகம், சிந்துவெளி விளக்கக்கூடம், கலையரங்கம், கலைக்கூடம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
தமிழ் அறிவு வளாகக் கட்டுமானத்திற்கு நன்கொடை அளித்து, இதனை ஆதரிக்கவும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பயணம் என்பது பல நிறுவனங்களின் மானியங்கள், நன்கொடையாளர்கள், பெருநிறுவனங்களின் சமூகக் கடமை திட்டங்கள்(CSR), தனிநபர்களின் நன்கொடைகள் முதலியவற்றின் ஆதரவால் சாத்தியமானது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளைக்கான நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 80G பிரிவின் கீழ் 50% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிவு வளாக கட்டட நிதிக்கான நன்கொடைகளை காசோலை, இணைய பரிமாற்றங்கள் அல்லது கீழே உள்ள இணைப்பு மூலம் வழங்கலாம்.

மின்னஞ்சல் குழுவில் இணைய
இதில் இணைவதன் மூலம் நூலகத்தின் செய்திமடலையும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் பெறலாம்
எங்களைப் பின்தொடர