Banner
நன்கொடை
கடந்த முப்பது ஆண்டுகளாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பயணம் என்பது பல நிறுவனங்களின் மானியங்கள், நன்கொடையாளர்கள், பெருநிறுவனங்களின் சமூகக் கடமை திட்டங்கள்(CSR), தனிநபர்களின் நன்கொடைகள் முதலியவற்றின் ஆதரவால் சாத்தியமானது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளைக்கான நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 80G பிரிவின் கீழ் 50% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிவு வளாக கட்டட நிதிக்கான நன்கொடைகளை காசோலை, இணைய பரிமாற்றங்கள் அல்லது கீழே உள்ள இணைப்பு மூலம் வழங்கலாம்.
இணையவழி நன்கொடை வழங்க இந்த இணைப்பைப் பயன்படுத்தவும். Link
(மேலே உள்ள இணைப்பிற்குச் செல்வதன்மூலம், நீங்கள் ஸ்டேட் பேங்கின் SB கலெக்ட் போர்ட்டலுக்குத் திருப்பி விடப்படுவீர்கள். நன்கொடைகள் வழங்க விவரங்களை நிரப்பவும். நீங்கள் உள்ளிடும் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும், யாருடனும் பகிரப்படாது.)
இணையவழி பரிவர்த்தனை முடிந்ததும், உங்கள் முகவரிக்கு தனிப்பயனாக்கப்பட்ட ஒப்புகைக் கடிதம் ரசீதுடன் அனுப்புவோம். உங்களின் வருமான வரி விலக்கிற்காக பயன்படுத்தப்படும் படிவம் 10BD, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் (வருமான வரித்துறை வெளியிட்டவுடன்) உங்களுக்குப் பகிரப்படும்.