ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தொடங்கப்பட்ட 1994 ஆம் ஆண்டிலிருந்து, தென்னிந்திய ஆய்வுகள், குறிப்பாக தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு, தேவையான முக்கியத்துவம் வாய்ந்த இலக்கியங்கள், மற்ற ஆவணங்களின் பரந்த சேகரிப்பைக் கொண்டுள்ளது.
இந்தச் சேகரிப்புகள்உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை ஈர்க்கின்றன. அமரர் ரோஜா முத்தையாவின் அசலாக ஆவணங்களைக் கருவாகக் கொண்டு, நூலகம் பலரிடம் நன்கொடையாக நூல்களைச் சேகரித்து, விரிவாக்கி உள்ளது. தனது சொந்த சேகரிப்புகளை நன்கொடையாக வழங்குபவர்கள், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அவர்களது நூல்களை நன்கு பாதுகாப்பதோடு, ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் என்று கருதுகின்றனர்.
நூலகத்தின் குறிப்பிடத்தக்க சில சேகரிப்புகள்:
- மு. அருணாசலம் அவர்களின் தொகுப்பு - தமிழ் இலக்கியம், இலக்கணம் தொடர்பான அரிய நூல்கள்
- ஏ.கே.ராமானுஜனின் தொகுப்பு - பண்டைய, நவீன தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்கள்
- தெ.பொ. மீனாட்சிசுந்தரத்தின் தொகுப்பு - தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பான நூல்கள்
- சா. கந்தசாமியின் தொகுப்பு - தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்கள், சிறு இதழ்கள், பருவ இதழ்கள்
- சிவசங்கரியின் தொகுப்பு - நவீன இலக்கியம், ஒலி நாடாக்கள், புகைப்படங்கள்
- எஸ்.முத்தையாவின் தொகுப்பு - மெட்ராஸ் வரலாறு தொடர்பான நூல்கள்