Banner
மின்னூலகம்
Susan

பேரா. வசந்தி தேவி சேகரிப்புகள்

கல்வியாளரான பேரா. வசந்தி தேவி (1938-) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும் (1992-1998) தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் (2002-2005) செயல்பட்டவர். சமூகச் செயற்பாட்டாளராக இவர் கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றில் முக்கிய பாங்காற்றி வருகிறார். குறிப்பாக, பெண்களின் கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இத்துடன் பெண்களுக்கு பாதுகாப்பான, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவர் சேகரித்த கடிதங்கள், அறிக்கைகள், செய்தித்தாள் துணுக்குகள் இன்னபிற ஆவணங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.

Susan

ஐராவதம் மகாதேவன் குறிப்பேடுகள்

ஐராவதம் மகாதேவன் தனது வாழ்நாள் முழுவதும் சிந்துவெளி எழுத்துகளிலும் தமிழ்-பிராமி எழுத்துகளிலும் பணியாற்றியவர். அதன்மூலம் சிந்துவெளித் தொடரடைவு, தமிழ்-பிராமி எழுத்துகளின் தொகுப்பு ஆகிய இரண்டு பெரும் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இத்துடன், பல ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வெளியிட்டார். சிந்துவெளி ஆய்வுகளுக்கு கருவி நூலாக உள்ள அவரின் சிந்துவெளித் தொடரடைவு indusscript.in என்ற தளத்தில் காணலாம். மேலும், ஞானோதயம் என்ற பெயரில் தனது ஆய்வு குறிப்பேடுகளை எழுதி வைத்திருந்தார். அவை எண்ணிமப்படுத்தப்பட்டு இங்கே பகிரப்பட்டுள்ளன. அவரது 8வது எண்ணிடப்பட்ட குறிப்பேடு கிடைக்கவில்லை.

ஆஷா மணிவண்ணன் மற்றும் மணி மணிவண்ணன் சேகரிப்புகள்

திருமிகு. ஆஷா மற்றும் திரு. மணிவண்ணன் ஆகியோர் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான பல பனை ஓலைச்சுவடி பிரதிகளை நூலகத்திற்கு வழங்கி உள்ளனர். அவை எண்ணிமப்படுத்தப்பட்டு இங்கே பகிரப்பட்டுள்ளன. இதில் சமயம், மருத்துவம், ஜோதிடம் தொடர்பான ஓலைச்சுவடிகளைக் காணலாம்.