சங்க இலக்கியத்தில் ஒன்றான பதிற்றுப்பத்து போல, ‘சங்கச்சுரங்கம்’ என்ற பெயரில் பத்துப் பத்து உரைகளாக, பத்து பிரிவுகளாக மொத்தம் 100 உரைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார் ஆர். பாலகிருஷ்ணன். ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு சங்க இலக்கிய வரியை அடிப்படையாகக் கொண்டவை. கொரொனா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த உரைத் தொடரில் இதுவரை 3 பிரிவுகளில் 30 உரைகள் நிகழ்த்தி உள்ளார். ஒவ்வொரு பத்து உரைகளும் ‘கடவுள் ஆயினும் ஆக, அணி நடை எருமை, ஓர் ஏர் உழவன்’ என்ற தலைப்புகளில் தனித்தனி நூல்களாகவும் வெளிவந்துள்ளன