‘கீழடி 40’ என்ற தொடர் காணொளி வரிசையில் கீழடி மற்றும் தற்கால தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான முக்கியமான 40 கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன். இந்தத் தொடர் காணொளி வரிசை சன் டிவியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பு ஆயின. இதில் தற்கால கீழடி ஆய்வுகள் - சங்க இலக்கியம் - சிந்துவெளி ஆய்வுகள் என்ற முப்பரிமாணத் தன்மையில் விளக்கங்களை அளித்துள்ளார் ஆர். பாலகிருஷ்ணன்.