தலைப்பு
: ரோஜா விதிகள்உரையாற்றுபவர்
: முனைவர் தே. சங்கர சரவணன்நாள் :
07, மே 2025நேரம் :
மாலை 5.30 மணிஇடம்
:ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இனி மாதம் தோறும் உரைவெளி என்ற பகுதியில் சிறந்த படைப்பாளர்களுடனும், சிந்தனையாளர்களுடனும் உரையாடல்களை மேற்கொள்ளப்போகிறோம். உரைவெளி என்பது உரையாடல்களுக்கான களம். எண்ணங்களையும் கருத்துகளையும் பொதுவெளியில் பகிர்ந்து புரியாதவற்றை புரிந்துகொள்ளும் அடிப்படையை உருவாக்கவேண்டும், பேசப்படாத கருத்துகளை பொதுவெளிக்கு கொண்டுவந்து உரையாடவேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி.
உரைவெளிப் பகுதியில் முதல்சொற்பொழிவாக முனைவர் சங்கர சரவணன் பேசவிருக்கிறார். முனைவர் சங்கர சரவணன் எழுத்தாளர், குடிமைப் பணிப் பயிற்சியாளர். பல ஆண்டுகளாக இலக்கியம், கலை, குடிமைப்பணி குறித்து உரையாடும் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது அவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.
கேள்விகளும், உரையாடல்களுமாக மிகுதியாகக் கொண்டு அமையவிருக்கும் இந்த நிகழ்விற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.